/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மரக்கன்றுகள் அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
மரக்கன்றுகள் அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மரக்கன்றுகள் அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மரக்கன்றுகள் அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : ஜூலை 21, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி குன்னுார் அருகே கருங்குளம், செங்குளம் கண்மாய்கள் அம்மச்சியாபுரத்தில் உள்ளன. இந்த கண்மாய்கரைகளில் சில ஆண்டுகளுக்கு முன் தன்னார்வலர்கள் சிலர் பனைமரங்கள், மரக்கன்றுகளை நடவு செய்து, பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சில சமூக விரோதிகள் கரைப் பகுதியில் நடவு செய்யப்பட்டு இருந்த பல பனை மரங்களை வெட்டி அகற்றினர். நேற்று முன்தினம் அங்கு சென்ற விவசாயிகள், தன்னார்வலர்கள் மரக்கன்றுகள் அகற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், 'மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.