ADDED : ஆக 24, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் மேற்கு வனச்சரகத்திற்குட்பட்ட கம்பமெட்டு வனப்பகுதியில் கடமான்கள் மற்றும் காட்டு பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இரவில் கம்பமெட்டு ரோட்டில் கடமான்கள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் கம்பமெட்டு வனப்பகுதியில் இருந்து மணி கட்டி ஆலமரம் வழியாக ஊத்துக்காடு கோம்பை ரோட்டில் இரண்டு வயதுடைய கடமான் குட்டி நாகம்மாள் கோயில் அருகில் நின்று கொண்டிருந்தது.
வழிதவறி ஊருக்குள் வந்த மானை அப்பகுதியில் உள்ள தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று பகல் 11:00 மணியளவில் ரேஞ்சர் ஸ்டாலின் தலைமையில் வனத்துறையினர் கம்பமெட்டு 11 வது வளைவில் முருக் கோடை வனப்பகுதியில் கடமானை வனப்பகுதிக்குள் விட்டனர்.