/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி மீட்பு
/
கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி மீட்பு
ADDED : செப் 28, 2024 05:41 AM
கடமலைக்குண்டு : மயிலாடும்பாறை அருகே வெம்பூரில் மேகமலை வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிகம் உள்ளன. நேற்று முன் தினம் இரவு உணவு மற்றும் தண்ணீர் தேடி பன்றிகள் கூட்டம் வெம்பூர் கிராமத்தின் மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்தது.
அப்போது 3 வயது மதிக்கத்தக்க ஆண் பன்றி தனியார் தோட்டத்தில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது. கிணற்றில் 30 அடி வரை நீர் இருந்ததால் பன்றிக்கு காயம் ஏற்படவில்லை. படிக்கட்டு இல்லாததால் பன்றி மேலே ஏறி வர முடியாமல் நீரில் தத்தளித்தது. இதனை கண்ட விவசாயிகள் கண்டமனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கண்டமனூர் வனச்சரகர் திருமுருகன் தலைமையில் வனவர், வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் காட்டுப்பன்றியை மீட்க முயற்சித்தும் முடியவில்லை.
இதனை தொடர்ந்து மயிலாடும்பாறை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அரை மணி நேரம் போராடி வலை மூலம் காட்டுப்பன்றியை கிணற்றில் இருந்து மீட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் காட்டுப்பன்றி அதே பகுதியில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.