ADDED : செப் 20, 2026 05:23 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.21–
தேனி நகர் பகுதி, சமதர்மபுரம், அல்லிநகரம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பெரியகுளம் சப் கலெக்டர் தவ்லேந்து ஆய்வு செய்தார்.
ஆய்வில் பொருட்கள் இருப்பு பராமரிப்பு பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். குறைகள், புகார்கள், பற்றி பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களிடம் கேட்டார். ரேஷன் அட்டைகளில் பெயர் உள்ளவர்கள் இ.கே.ஒய்.சி., செய்வது பற்றி எடுத்துரைத்தார். தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
