/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெருவிளக்கு, ரோடு வசதி இல்லாததால் வீடுகளுக்குள் முடங்கும் குடியிருப்போர் அடிப்படை வசதியில்லாத வசந்தம் நகர் பொது மக்கள் அவதி
/
தெருவிளக்கு, ரோடு வசதி இல்லாததால் வீடுகளுக்குள் முடங்கும் குடியிருப்போர் அடிப்படை வசதியில்லாத வசந்தம் நகர் பொது மக்கள் அவதி
தெருவிளக்கு, ரோடு வசதி இல்லாததால் வீடுகளுக்குள் முடங்கும் குடியிருப்போர் அடிப்படை வசதியில்லாத வசந்தம் நகர் பொது மக்கள் அவதி
தெருவிளக்கு, ரோடு வசதி இல்லாததால் வீடுகளுக்குள் முடங்கும் குடியிருப்போர் அடிப்படை வசதியில்லாத வசந்தம் நகர் பொது மக்கள் அவதி
ADDED : நவ 11, 2024 04:55 AM

தேனி: 'தேனி அருகே தப்புக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்குச் செல்லும் ரோடு மழையால் கரைய துவங்கி உள்ளது. மேலும் இந்த ரோட்டில் போதிய தெரு விளக்கு இல்லாததால் குடியிருப்போர் மாலை நேரத்திற்கு பின் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. இப்பகுதிக்கு போலீசார் ரோந்து வர வேண்டும்.' என, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி ஒன்றியத்தில் தப்புக்குண்டு ஊராட்சி உள்ளது. திண்டுக்கல் - குமுளி பைபாஸ் ரோட்டில் இருந்து தப்புக்குண்டு செல்லும் ரோட்டில் அரசு கலை அறிவியல் கல்லுாரி, அரசு சட்டக் கல்லுாரி, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ளன. இக்குடியிருப்புகளில் ரூ.4.3 கோடி மதிப்பில் 431 வீடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் தற்போது வரை 62 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த குடியிருப்பு வசந்தம் நகர் என அழைக்கப்படுகிறது. இங்கு இதுவரை 35 குடும்பங்கள் குடியேறி உள்ளன.
அரசு கலை அறிவியல் கல்லுாரிக்கு பின்னால் அமைந்துள்ள குடியிருப்புக்கள் கல்லுாரியின் சுற்றுச்சுவரை ஒட்டி 350 மீட்டர் துாரத்திற்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.6.32 லட்சம் மதிப்பில் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடு மழை பெய்தால் கரைந்து செல்கிறது. இதனால் அவ்வழியாக செல்வோர் விபத்தில் சிக்கி காயம் ஏற்படுவது தொடர்கிறது. தொடர் மழை பெய்தால் அந்த ரோட்டின் பல இடங்களில் இதே நிலை ஏற்படும்.
குடியிருப்புப் பகுதியில் 10 இடங்களுக்கு மேல் வீட்டு உபயோகத்திற்காக பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. அவை இன்று வரை காட்சி பொருளாகவே உள்ளன. ஊராட்சி சார்பில் கொசு மருந்து தெளித்தல், குப்பை வாங்குதல் உள்ளிட்ட எந்த பணிக்கும் ஆட்கள் செல்வதில்லை.
அரசு கல்லுாரிகளுக்கு சில நேரங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனை இந்த குடியிருப்பு பகுதி வரை நீட்டிக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின் விளக்கு வசதி தேவை
முருகேசன், டிரைவர், வசந்தம் நகர்: தப்புக்குண்டு ரோட்டில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் ரோட்டில் இரவில் தெரு விளக்குகள் இல்லை. இதனால் ரோடு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. விஷ ஜந்துக்களால் குடியிருப்போர் பாதிக்கும் அபாயம் உள்ளது.
மேலும் தார் ரோடு அமைத்து, அருகில் உள்ள நீர் ஓடையை அமைத்து தர வேண்டும். இரவில் குடியிருப்புக்கான பாதையில் அமர்ந்து சிலர் மது அருந்துவதால் பெண்கள், குடியிருப்போர் மாலை நேரத்திற்கு பின் வீடுகளை விட்டு வெளியே செல்வதில்லை. தினமும் போலீசார் குடியிருப்பு பகுதியில் ரோந்து வர வேண்டும்.
ஒரு ரூபாய்க்கு தீப்பெட்டி வாங்க ரூ.25 செலவு
வேல்முருகன், வசந்தம் நகர்: இப்பகுதியில் கடைகள் ஏதும் இல்லை. பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் 4 கி.மீ., துாரத்தில் உள்ள தப்புக்குண்டு செல்ல வேண்டும். உதாரணமாக ஒரு ரூபாய்க்கு தீப்பெட்டி வாங்க ரூ.25 செலவு செய்யும் நிலை உள்ளது. நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டு உபயோகத்திற்கான பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள், சிறுவர் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பஸ் வசதி செய்து தர வேண்டும்.', என்றார்.