/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதமடைந்த தரைப்பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சம் தேனி நகராட்சி 5வது வார்டு மச்சால் தெரு குடியிருப்போர் குமுறல்
/
சேதமடைந்த தரைப்பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சம் தேனி நகராட்சி 5வது வார்டு மச்சால் தெரு குடியிருப்போர் குமுறல்
சேதமடைந்த தரைப்பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சம் தேனி நகராட்சி 5வது வார்டு மச்சால் தெரு குடியிருப்போர் குமுறல்
சேதமடைந்த தரைப்பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சம் தேனி நகராட்சி 5வது வார்டு மச்சால் தெரு குடியிருப்போர் குமுறல்
ADDED : செப் 25, 2024 05:06 AM

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி 5வது வார்டில் சேதமடைந்த தரைப்பாலத்தில் மூன்று மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள் ஆபத்தான வகையில் நடந்து செல்வதால் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நகராட்சியின் 5வது வார்டில் மச்சால் தெருவில் 1,2,வது தெருக்கள், கிணற்றுத் தெரு, ஓம்சக்தி கோயில் தெரு, தொத்தம்மன், செங்கோல், இளங்கோ, கம்பர், ரெங்கசமுத்திரம் தெருக்கள் உள்ளன. 950 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப் பகுதியில் பேவர் பிளாக் கற்கள் சேதமடைந்துள்ளதால் வாகனங்களில் செல்வோர் சிரமம் அடைகின்றனர். சாக்கடை முறையாக சுத்தம் செய்யாததால் அவை தேங்கி மழை காலங்களில் வீடுகளுக்குள் வால்புழுக்கள் புகுந்து விடுகின்றன. இச் சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள், முதியோர் அடிக்கடி காய்ச்சலால் பாதிக்கின்றனர். தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சப்ளையாகும் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது என உள்ளிட்ட பல்வேறு வசதி குறைபாடுகளால் தேனி அல்லிநகரம் நகராட்சி 5வது வார்டு மச்சால் தெரு குடியிருப்போர் சிரமப்படுகின்றனர். மச்சால் தெரு, அதன் குறுக்குத் தெருக்களில் வசிக்கும் குடியிருப்போர் அம்மாள், வள்ளி, லட்சுமி, பாப்பாத்தி, ராஜம்மாள் ஆகியோர் கூறியதாவது:
சேதமடைந்த சாக்கடை நடைபாலம்
மச்சால் முதல் குறுக்குத் தெருவின் மைய பகுதியில் சாக்கடை செல்கிறது. இதன் மீது நடைபாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த நடைபாலம் சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் மழைநீரும் சாக்கடை நீரும் அதிகளவில் வந்து, சேதமடைந்தது. தற்போது கான்கீரிட் பெயர்ந்து கம்பிகள் மட்டுமே உள்ளது. இதில் நடந்து செல்வோர் சிறிது கவனம் சிதறினாலும் சாக்கடைக்குள் விழும் அபாய குழியாக மாறிவிட்டது. இது குறித்து வார்டு கவுன்சிலரிடம் தகவல் அளித்தோம். அவர் நகராட்சியில் கோரிக்கை வைத்தார். இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை.
இரவில் தெருக்களில் நடக்க முடியாத அளவில் தெரு நாய்கள் அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிகின்றன. நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். தொத்தம்மன் தெருவில் பேவர் பிளாக் கற்கள் சேதமடைந்துள்ளன. அதனை சீரமைத்து தெரு முழுவதும் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும்.
குப்பையால் சுகாதாரக்கேடு
பகவதியம்மன் கோயில் பின்புறம் தண்ணீர் தொட்டி அருகே உள்ள சாக்கடையில் குப்பை கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள கடையில் அனுமதியின்றி மது விற்பதால் மதுபிரியர்கள் பெண்களை அவதுாறாக பேசி தகராறில் ஈடுபடுவது தொடர்கிறது. இதனால் போலீசார் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும். மழை காலங்களில் சாக்கடை நிரம்புவதால் கழிவுநீரில் உற்பத்தியாகும் வால்புழுக்கள் வீடுகளில் புகும் அவல நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் சாக்கடை கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும். இப்பகுதியில் வைகை அணை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளையாகிறது. தற்போது 4 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. அதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்க நடவடிக்கை தேவை., என்றனர்.