/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெருவிளக்கு, சாக்கடை வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள் தேனி நகராட்சி 8 வது வார்டு அப்துல்கலாம் நகர் குடியிருப்போர் குமுறல்
/
தெருவிளக்கு, சாக்கடை வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள் தேனி நகராட்சி 8 வது வார்டு அப்துல்கலாம் நகர் குடியிருப்போர் குமுறல்
தெருவிளக்கு, சாக்கடை வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள் தேனி நகராட்சி 8 வது வார்டு அப்துல்கலாம் நகர் குடியிருப்போர் குமுறல்
தெருவிளக்கு, சாக்கடை வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள் தேனி நகராட்சி 8 வது வார்டு அப்துல்கலாம் நகர் குடியிருப்போர் குமுறல்
ADDED : மார் 06, 2024 04:40 AM

தேனி: தெருவிளக்குகள் இன்றி இருளில் மூழ்கும் தெருக்கள், பாதையில் முட்செடிகள் புதராக வளர்ந்து வருவதால் போக்குவரத்திற்கு சிரமம், சாக்கடை வசதி இன்றி ரோட்டில் ஓடும் கழிவுநீர், அதனால் ஏற்படும் சுகாதாரக்கேடு, குண்டும் குழியுமான ரோட்டில் அடிக்கடி விபத்திற்குள்ளவதாக தேனி நகராட்சி 8 வது வார்டு வெங்கலா கோயில் எதிர்புறம் உள்ள விரிவாக்கப்பகுதியான அப்துல்கலாம் நகர் குடியிருப்போர் குமுறுகின்றனர்.
இந்நகராட்சியின் 8 வது வார்டில் விரிவாக்கப்பகுதியாக உள்ள அப்துல் கலாம் நகர் என பெயர் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர், சாக்கடை, மின்சார வசதி, ரோடு என அடிப்படை வசதிகள் இன்றி தனித்தீவாக மாறியுள்ளது.
இங்கு 15 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப் பகுதியில் குடியிருப்போர் பாண்டியன், நித்யகல்யாணி, பழனியம்மாள், சரண்யா ஆகியோர் கூறியதாவது:
பெயரளவில் நடந்த முகாம்
ஊரக பகுதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நகராட்சி வார்டுகளில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் வளர்ச்சி திட்ட முகாம் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அப்துல்கலாம் நகரில் 8 மாதங்களுக்கு முன் நடந்த அந்த முகாமில் இப்பகுதி பெண்கள், பொது மக்கள் ஒன்றிணைந்து தெருவிளக்கு, ரோடு, பொது கழிப்பறை அமைக்க மனு அளித்தோம். எட்டு மாதங்கள் முடிந்த நிலையில் ஒரு கோரிக்கைக்கு கூட நிறைவேற்ற வில்லை. இது வேதனையாக உள்ளது. இம் முகாமில் பெயரளவிற்கு மனு வாங்கி விட்டு செயல்படுத்தாமல் விட்டு விட்டனர்.
அடிக்கடி விபத்து
குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வில்லை. சாக்கடை வசதி இல்லை. ரோடும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரவில் டூவீலரில் செல்வோர், ரோட்டில் விழுந்து காயமடைகின்றனர். நகராட்சி ரோடு அமைத்து, பெண்கள் கழிப்பறை கட்டித்தர வேண்டும். உடனடியாக ரோடு அமைத்து, கூடுதல் மின் கம்பங்கள் அமைத்து தெரு விளக்குகள் வசதி செய்து இருளில் மூழ்கியுள்ள தெருக்களில் வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும். மேலும் வார்டு கவுன்சிலர் சமீபத்தில் இங்கு குடிநீர் இணைப்பு பெற்று தந்தார்.
ஆனால் கூடுதல் இணைப்புகள் தேவைப்படுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறையாக ஏற்படுகிறது. கூடுதல் இணைப்பு வழங்க வேண்டியது அவசியம்.', என்றனர்.

