/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அடிப்படை வசதி கோரி தேனி, பெரியகுளம் பகுதி குடியிருப்போர் கலெக்டரிடம் மனு
/
அடிப்படை வசதி கோரி தேனி, பெரியகுளம் பகுதி குடியிருப்போர் கலெக்டரிடம் மனு
அடிப்படை வசதி கோரி தேனி, பெரியகுளம் பகுதி குடியிருப்போர் கலெக்டரிடம் மனு
அடிப்படை வசதி கோரி தேனி, பெரியகுளம் பகுதி குடியிருப்போர் கலெக்டரிடம் மனு
ADDED : அக் 22, 2024 05:29 AM

தேனி: தேனி ரத்தினம் நகர், பெரியகுளம் ஏ.வாடிப்பட்டி புதுார் பொதுமக்கள் சாக்கடை வசதி, ரோடு வசதி செய்துதரக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார்.
கலெக்டர் நேர்முக உதவியாளர் முகமது அலி ஜின்னா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பெரியகுளம் தாலுகா ஏ.வாடிப்பட்டி புதுார் பொதுமக்கள் சார்பாக பெரியநாச்சி, பஞ்சு உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், கிராமத்தில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை.
இதனால் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி பலர் டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சையில் உள்ளனர். சாக்கடை வசதி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்
தேனி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ரத்தினம் நகர் அருகே உள்ள சுப்பிரமணி- மணிநகர் குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் கருப்பசாமி, செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் வழங்கிய மனுவில், 'எங்கள் பகுதியை சுற்றி உள்ள கிருஷ்ணா அவென்யூ, முத்துநகர், எம்.எம்.டி.,நகர் உள்ளிட்ட பகுதகளில் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது.
மழை பெய்தால் ரோட்டில் மழைநீர் குளம் போல் தேங்குகிறது. இதனால் குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். ரோடு வசதி ஏற்படுத்தவும், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வேண்டும்'. என கோரினர்.
ஐக்கிய கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் மனுவில், 'தேனி உழவர் சந்தையில் இருந்து மீறு சமுத்திர கண்மாய் வழியாக திண்டுக்கல்- குமுளி பைபாஸ் ரோட்டிற்கு தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க கோரினார். என்றிருந்தது.
குழந்தைக்கு பாதுகாப்பு வழங்க மனு
பெரியகுளம் டி.கள்ளிபட்டி ராஜேஷ்குமார் மனுவில், 'எனக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளன. எனது மனைவி சில நாட்களுக்கு முன் பெண் குழந்தைக்கு சூடு வைத்தவிட்டார்.
குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து, தென்கரை போலீசில் புகார் செய்தோம். போலீஸ் ஸ்டேஷனில், மனைவி குடும்பத்தினர் இனி பிரசனை செய்ய மாட்டோம் என எழுதி கொடுத்து சென்றனர். தற்போது குழந்தை வேண்டும் என புகார் அளித்துள்ளார். எனக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இருந்தது.
பெட்ரோலுடன் வந்த பெண் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மனு வழங்க வந்த உசிலம்பட்டி ஒத்த தோட்டம் பகுதி மாரியம்மாள் 55, உடமைகளை சோதனையிட்டனர்.
அவர் வாட்டர் கேனில் பெட்ரோல் கொண்டு வந்தது தெரிந்தது. அதனை கைபற்றி பின் மனு அளிக்க போலீசார் அனுமதித்தனர்.
இவர் சில வாரங்களுக்கு முன்பு மனு அளிக்க வந்த போது, இவரிடமிருந்து போலீசார் பெட்ரோல் பாட்டில் கைப்பற்றியது குறிப்பிட தக்கது.