/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சத்துணவில் 60ஆயிரம் காலிபணி இடங்கள் நிரப்ப கோரி தீர்மானம்
/
சத்துணவில் 60ஆயிரம் காலிபணி இடங்கள் நிரப்ப கோரி தீர்மானம்
சத்துணவில் 60ஆயிரம் காலிபணி இடங்கள் நிரப்ப கோரி தீர்மானம்
சத்துணவில் 60ஆயிரம் காலிபணி இடங்கள் நிரப்ப கோரி தீர்மானம்
ADDED : அக் 20, 2024 07:05 AM
தேனி : தேனி கொடுவிலார்பட்டியில் சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் கலா தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தாஜூதீன், சத்துணவு ஊழியர் சங்க மாநில பொருளாளர் திலகவதி, மாநில பொதுச்செயலாளர் மலர்விழி மாவட்ட தலைவர் லட்சுமி, மாவட்ட செயலாளர் பவானி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.கூட்டத்தில் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவுத்திட்டத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.