/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மரங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரி தீர்மானம்
/
மரங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரி தீர்மானம்
ADDED : நவ 01, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுாரில் சோலைக்குள் கூடல் அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் சீனிவாசன் தலைமையில், பொருளாளர் சண்முகன் முன்னிலையில் நடந்தது.
மரங்களை நேசித்த ஜெகதீஷ் நினைவாக தமிழ்நாட்டில் வனப்பகுதி அல்லாத பொது இடங்களில் உள்ள மரங்களை பாதுகாக்கும் வகையில் 'தமிழ்நாடு மரங்கள் பாதுகாப்பு சட்டம்' இயற்றக் கோரி தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர்கள் விருது பெற்ற 30 மாவட்டங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பசுமையாளர்கள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கூடலுாரில் நடந்த கூட்டத்தில் இச்சட்டத்தை தமிழக அரசு இயற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.

