/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பலன் தரும் மரங்கள் நட ஊராட்சியில் தீர்மானம்
/
பலன் தரும் மரங்கள் நட ஊராட்சியில் தீர்மானம்
ADDED : பிப் 15, 2024 06:26 AM
போடி: போடி ஒன்றியம், மணியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குதுவல் நிலத்தில் 50 ஏக்கருக்கு மேல் சீமைக்கருவேல் மரங்கள் வளர்ந்துள்ளன. பட்டுப்போன வேம்பு மரங்களும் உள்ளன. சீமைக்கருவேல் மரங்களால் நிலத்தடி நீர் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிப்படைந்து வருகின்றன.
இதனை தவிர்க்க சீமைக்கருவேல் மரங்களை அகற்றி விட்டு, ஊராட்சிக்கு பலன் தரும் மரங்களை நட பசுமை குழு, வனத்துறை, கலெக்டரிடம் ஊராட்சி நிர்வாகம் அனுமதி பெற்றுள்ளது. சீமைக்கருவேல் மரங்களை வெட்டி பொது ஏலம் விடவும், வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கு பதிலாக ஊராட்சிக்கு பலன் தரக்கூடிய வகையில் தென்னை, இலவம், மா, புளி, கொய்யா, நெல்லி, நாவல், மூங்கில், பனை மரங்களை நடவு செய்து வளர்த்திடும் வகையில் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

