/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி புது பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் ரூ.3 கோடி செலவில் தடுப்புச்சுவர்
/
தேனி புது பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் ரூ.3 கோடி செலவில் தடுப்புச்சுவர்
தேனி புது பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் ரூ.3 கோடி செலவில் தடுப்புச்சுவர்
தேனி புது பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் ரூ.3 கோடி செலவில் தடுப்புச்சுவர்
ADDED : மார் 17, 2024 06:38 AM

தேனி: தேனி புதுபஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோட்டில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தேனியில் கர்னல் ஜான் பென்னிகுவிக் புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டில் உள்ளது. பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் ரோடான தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் இருந்து அன்னஞ்சி விலக்கு வரை உள்ள 2.5 கி.மீ., ரோடு மாநில நெடுங்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் ரோடு இரு மலைகளுக்கும் நடுவே செல்கிறது. மழை காலங்களில் மண் மற்றும் கற்கள் சரியும் அபாயம் இருந்தது. தற்போது வனத்துறை அனுமதியுடன் ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக புது பஸ்ஸ்டாண்டில் இருந்து மதுரை ரோடு ரயில்வே கேட் வரை உள்ள 500 மீ., துாரத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் கோட்ட பொறியாளர் சுவாமிநாதன் மேற்பார்வையில், உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி முன்னிலையில் பணிகள் நடந்து வருகிறது.அதிகாரிகள் கூறுகையில், வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 500 மீ., ரோட்டில் ரூ.3 கோடி செலவில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் இரவில் நடந்து வருகிறது. மேலும் நேரு சிலை, அன்னஞ்சி விலக்கில் புதிதாக வழிகாட்டி பலகைகள் வைப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன என்றனர்.

