/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓய்வு பேராசிரியையிடம் டிஜிட்டல் கைது என ரூ.84.50 லட்சம் மோசடி
/
ஓய்வு பேராசிரியையிடம் டிஜிட்டல் கைது என ரூ.84.50 லட்சம் மோசடி
ஓய்வு பேராசிரியையிடம் டிஜிட்டல் கைது என ரூ.84.50 லட்சம் மோசடி
ஓய்வு பேராசிரியையிடம் டிஜிட்டல் கைது என ரூ.84.50 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 09, 2025 07:28 AM
தேனி : தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியில் ஓய்வு பெற்ற ஐ.ஐ.டி., பேராசிரியை பானுமதி 74,யை டிஜிட்டல் கைது செய்த மோசடி நபரை குண்டாசில் கைது செய்த மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் பாராட்டியுள்ளது.
கெங்குவார்பட்டியை சேர்ந்த பானுமதி சென்னை ஐ.ஐ.டி., மற்றும் அமெரிக்கா, வடக்கு கரோலினா பல்கலையில் முதுநிலை ஆராய்ச்சியாளராக பணியாற்றி ஓய்வு பெற்று வீட்டில் இருந்தார். 2023 மே 18 ல் இவரின் அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள், மும்பை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசுகிறோம் எனக்கூறி டிஜிட்டல் கைது செய்துள்ளதாக ,'கூறி அவரிடம் இருந்து ரூ.84.50 லட்சத்தை மோசடி செய்தனர். அவர், தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில், டில்லி துவாரகாவில் உள்ள சித்ரகூட் தாம் குடியிருப்பு பகுதிக்கு சென்ற இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் தலைமையிலான போலீசார் அபிஜித்சிங்கை கைது செய்தனர்.
உச்சநீதிமன்றம் பாராட்டு
கைதான அபிஜித்சிங்கை குண்டாசில் கைது செய்ய எஸ்.பி., பரிந்துரையில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அபிஜித்சிங் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனை எதிர்த்து அபிஜித்சிங் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்தீப்மேத்தா, ஜாய்மாலா பக்சி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, சைபர் குற்ற நபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் சட்டம் பயன்படுத்தப்படுவதை,மாநிலங்களில் இருந்து வரும் சரியான நடவடிக்கையாக பார்க்கிறோம். இது வரவேற்கத்தக்க அணுகுமுறை. சைபர் குற்றவாளிகளுக்குஎதிராக சாதாரண குற்றவியல் சட்டங்கள் வெற்றியடைவதில்லை.' என தெரிவித்திருந்தனர்.
இதனால் தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங், எஸ்.பி.,சிவபிரசாத், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்.ஐ., தாமரைக்கண்ணன்தலைமையிலான போலீசாருக்கு மாநில சைபர் குற்றத்தடுப்புத்துறை கூடுதல் காவல்துறை இயக்குனர் சந்தீப்மிட்டல், மண்டல எஸ்.பி., பிரபாகர் பாராட்டினர்.