/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்வி உதவித்தொகை வழங்கிய ஓய்வு ஆசிரியர்
/
கல்வி உதவித்தொகை வழங்கிய ஓய்வு ஆசிரியர்
ADDED : பிப் 15, 2024 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் முருகேசன்.
இறந்த ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியையான தனது மனைவி சாந்தாதேவி, சகோதரன் குமரேசன் ஆகியோர் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார். நேற்று கூடலுார், லோயர்கேம்ப் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் 200 மாணவர்களுக்கு தலா ரூ.1500, ரூ.2000, ரூ.2500 என மொத்தம் ரூ. 3 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கினார். குடும்பத்தினர் மகாலெனின் சாந்தகுமார், சரண்யா உடன் இருந்தனர். கடந்த 13 ஆண்டுகளாக கல்வித் தொகை தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

