/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
/
வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : செப் 02, 2025 05:36 AM

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் முதுநிலைபட்டியில் வெளியிடாததை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேந்திரன், மாவட்ட பொருளாளர் சதிஷ்குமார், நிர்வாகி ஒச்சாத்தேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சங்கத்தினர் கூறுகையில், வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை முதுநிலை பட்டியல் வெளியிட கோரி பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. காலிப்பணியிட எண்ணிக்கையை முரண்பாடாக அரசுக்கு வழங்கியதால் நேரடி நியமன உதவியாளர் அதிகம் உள்ளனர். இவ்விகிதாசாரம் சரியாகும் வரை நேரடி உதவியாளர் காலியிட விவரங்களை அரசுக்கு அளிக்க கூடாது. முதுநிலை பட்டியில் வெளியீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்கில் 4 மாதங்களாக எதிர்வாதம் தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தும் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை நிர்வாகத்தை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றனர்.