/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வருவாய்த்துறையினர் உள்ளிருப்பு போராட்டம்
/
வருவாய்த்துறையினர் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : பிப் 23, 2024 05:47 AM

தேனி : அரசு அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த்துறையினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வழக்கமான அலுவல் பணிகள் பாதிப்பு
மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில்,'தாலுகாக்களில் சான்றிதழ் வழங்கும் பணிக்கு புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பணியிடங்களை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வழக்கமான அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற்றாாவிட்டால் பிப்.,27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட இணைச்செயலாளர் ஒச்சாத்தேவன் தலைமை வகித்தார். உத்தமபாளையத்தில் மாவட்ட தலைவர் ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் சுரேந்திரன், போடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கண்ணன், மத்திய செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.