/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வருவாய் மாவட்ட தடகள போட்டி பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வம்
/
வருவாய் மாவட்ட தடகள போட்டி பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வம்
வருவாய் மாவட்ட தடகள போட்டி பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வம்
வருவாய் மாவட்ட தடகள போட்டி பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வம்
ADDED : அக் 23, 2024 05:10 AM

கம்பம், : ராயப்பன்பட்டி எஸ். யூ. எம். மேல்நிலைப்பள்ளியில் தேனி வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் நடைபெற்றது.
ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப்பள்ளியில் தேனி வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா தலைமை வகித்தார்.
தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன், எஸ்.யூ.எம். மேல் நிலைப்பள்ளி தாளாளர் பிரபாகர் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவ மாணவியரின் அணி வகுப்பு நடைபெற்றது.
போட்டியில் 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1200 மீ.,ஒட்டம், குண்டு எறிதல், தட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. மாவட்டத்தில் குறுவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
சாம்பியன் பட்டம் வென்ற பள்ளிகள்
தடகள போட்டிகளில் மாணவர்கள் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை தேனி முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், மாணவிகள் பிரிவில் ராயப்பன்பட்டி செயின்ட் ஆக்னஸ் மேல்நிலைப்பள்ளியும் வென்றன.