/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொடுவிலார்பட்டி தோட்டத்தில் 20 குவியல்களாக ஆற்று மணல் வருவாய்த்துறையினர் கைப்பற்றி விசாரணை

ADDED : ஜூலை 26, 2025 04:26 AM
தேனி: தேனி கொடுவிலார்பட்டி அருகே ஆற்றில் இருந்து அள்ளி வரப்பட்ட மணல் குவியலை வருவாய்த்துறையினர் கைப்பற்றினர். ஆனால் மாவட்டத்தில் சில ஆண்டுகளாக ஆற்றில் இருந்து மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மணல் அள்ளியவர்கள் மீது நேற்று மாலை வரை போலீசில் புகார் ஏதும் அளிக்கவில்லை.
தேனி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆற்றில் இருந்து கட்டுமான பணிகள் உள்ளிட்ட எதற்காகவும் மணல் எடுக்க கூடாது என விதிமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிற்கு கொடுவிலார்பட்டி பாண்டியராஜபுரத்தில் தனியார் தோட்டத்தில் ஆற்று மணல் குவித்து வைத்துள்ளதாக புகார் சென்றது. கலெக்டர் உத்தரவில் நேற்று முன்தினம் தேனி தாசில்தார் சதிஸ்குமார், கொடுவிலார்பட்டி வி.ஏ.ஓ., கீதா பாண்டியராஜபுரம் பகுதியில் உள்ள தோட்டங்களில் ஆய்வு செய்தனர். மூலவைகை ஆற்றின் அருகே இருந்த ஒரு தென்னந்தோப்பில் குவியல் குவியலாக ஆற்று மணல் இருந்ததை கண்டறிந்தனர்.
தோட்டத்தின் உரிமையாளரிடம் வருவாய்த்துறையினர் விசாரித்தனர். ஆனால் தோட்டத்தை ஒருவருக்கு குத்தகைக்கு விட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். ஆற்றில் இருந்து மணல் அள்ளப்பட்டுள்ளதால் மணல் குவியல் தொடர்பாக வருவாய்த்துறையினர் நீர்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மணல் குவியல் தொடர்பாக நீர்வளத்துறை உதவி பொறியாளரை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது பதில் அளிக்கவில்லை.
ஆனால், ஆற்று மணல் குவியல் தொடர்பாக வருவாய்த்துறை, நீர்வளத்துறை என யாரும் இதுவரை போலீசில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.