/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் ஆய்வு கூட்டம்
/
ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் ஆய்வு கூட்டம்
ADDED : மே 30, 2025 03:26 AM

பெரியகுளம்: பெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி ஊராட்சி அலுவலகத்தில் சரவணக்குமார் எம்.எல்.ஏ., வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு கூட்டம் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
இதில் கிராமத்தில் ரோடு, ஓடை தடுப்பு சுவர், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
நிகழ்ச்சியில் பி.டி.ஓ.,க்கள் மலர்விழி, பாலகிருஷ்ணன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள்,
தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், எண்டப்புளி ஊராட்சி முன்னாள் தலைவர் சின்னபாண்டியன், ஊராட்சி செயலர் வீரபத்திரன் பங்கேற்றனர். இதே போல் கீழ வடகரை ஊராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
ஊராட்சி செயலர் லெனின் பங்கேற்றார். அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றார். ஊராட்சி செயலர் கணபதி பங்கேற்றார்.-