/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொக்கு கூட்டங்களால் நெல் நாற்றங்கால் சேதம்
/
கொக்கு கூட்டங்களால் நெல் நாற்றங்கால் சேதம்
ADDED : ஜூலை 01, 2025 03:18 AM
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடிக்காக வளர்க்கப்படும் நாற்றங்காலில் இரை தேடும் கொக்குகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து இரை தேடுவதால் நாற்றுகள் சேதமடைவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
முதல் போக சாகுபடிக்காக வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட ஊர்களில் விவசாயிகள் நாற்றங்கால் அமைந்துள்ளனர். கம்பம் பகுதியில் நடவு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாற்றங்காலில் கொக்குகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து இரை தேடி வருகிறது. நெல் நாற்றுகள் வளர்ச்சிக்காக இடப்படும் புண்ணாக்குகளில் புழுக்கள் உருவாகும். அந்த புழுக்களை உண்ணுவதற்காக கொக்குகள் கூட்டம் கூட்டமாக நாற்றங்காலில் அமர்கின்றன. இதனால் நாற்றுகளும் சேதமடைகின்றன. நடவு வயல்களிலும் கொக்கு கூட்டங்கள் முகாமிடுவதால் சேதம் ஏற்படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.