/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இருமாதத்தில் 30 ஆயிரம் பேர் ரசித்த ' ரிப்பிள்' நீர்வீழ்ச்சி
/
இருமாதத்தில் 30 ஆயிரம் பேர் ரசித்த ' ரிப்பிள்' நீர்வீழ்ச்சி
இருமாதத்தில் 30 ஆயிரம் பேர் ரசித்த ' ரிப்பிள்' நீர்வீழ்ச்சி
இருமாதத்தில் 30 ஆயிரம் பேர் ரசித்த ' ரிப்பிள்' நீர்வீழ்ச்சி
ADDED : ஆக 10, 2025 03:19 AM

மூணாறு: ராஜாக்காடு அருகே ஸ்ரீநாராயணபுரத்தில் உள்ள ' ரிப்பிள்' நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதனை கடந்த இரண்டு மாதங்களில் 30 ஆயிரம் பயணிகள் ரசித்தனர்.
இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு அருகே ஸ்ரீ நாராயணபுரத்தில்' ரிப்பிள்' நீர்வீழ்ச்சி உள்ளது. அந்த நீர்வீழ்ச்சியால், அப்பகுதி சுற்றுலாவில் முக்கிய இடம் பிடித்தது.
மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம் கட்டுப்பாட்டில் உள்ள நீர்வீழ்ச்சியில் நடைபாதை, கழிப்பறை, ஓய்வு மையம், பாதுகாப்பு வசதி உட்பட பல்வேறு பணிகளுக்கு ரூ.1.5 கோடி செலவிடப்பட்டது. மிகவும் ரம்மியமாக காணப்படும் நீர்வீழ்ச்சியை மழையையும் பொருட்படுத்தாமல் தினமும் சராசரி 500 பயணிகள் வீதம் கடந்த இரண்டு மாதங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரசித்ததாக சுற்றுலா துறை கணக்கிட்டுள்ளது. அதன் மூலம் ரூ.8 லட்சம் வருவாய்கிடைத்தது.
நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.25, சிறுவர்களுக்கு ரூ.15ம் வசூலிக்கின்றனர்.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பூப்பாறையில் இருந்து ராஜாக்காடு சென்று அங்கிருந்து 4 கி.மீ., தொலைவில், மூணாறில் இருந்து இரண்டாம் மைல், குஞ்சுதண்ணி வழியாக 19 கி.மீ., தொலைவில் ' ரிப்பிள்' நீர்வீழ்ச்சி உள்ளது.