தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/மூணாறில் அதிகரிக்கும் குளிர்

மூணாறில் அதிகரிக்கும் குளிர்

மூணாறில் அதிகரிக்கும் குளிர்


UPDATED : நவ 21, 2026 05:26 PM

ADDED : நவ 21, 2026 05:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 05:26 PM ADDED : நவ 21, 2026 05:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூணாறு: மூணாறில் வழக்கத்திற்கு மாறாக காலை நேரங்களில் வெப்பநிலை மைனஸ் டிகிரியை நெருங்குவதால் முன் கூட்டியே உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் இந்தாண்டு தென் மேற்கு பருவமழை சராசரி அளவைவிட 47 சதவீதம் குறைவு என தெரியவந்தது. மாவட்டத்தில் அதிகம் மழை பெய்யும் மூணாறிலும் பருவமழை வெகுவாக குறைந்தது. இந்தாண்டு 224 செ.மீ., மழை பெய்த நிலையில், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் குறைவாகும்.

மூணாறில் ஆண்டு தோறும் டிச., இறுதி மற்றும் ஜன., மாத காலையில் வெப்பநிலை மைனஸ் டிகிரி செல்சியஸ் வரை குறைந்து உறைபனி ஏற்படுவது வழக்கம். இந்தாண்டு நவம்பரில் இருந்தே காலையில் வெப்பநிலை வெகுவாக குறைந்து வருகிறது. மூணாறில் நேற்று காலை வெப்பம் 6 டிகிரி செல்சியஸ்சாக இருந்த நிலையில், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல பகுதிகளில் 2 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது. இதனால் வழக்கத்தை விட முன்கூட்டியே உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us