/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பத்தில் தேங்கிய கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்
/
கம்பத்தில் தேங்கிய கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்
கம்பத்தில் தேங்கிய கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்
கம்பத்தில் தேங்கிய கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூலை 13, 2025 12:28 AM

கம்பம்:கம்பம் திருவள்ளுவர் காலனியில் சாக்கடை கழிவு நீர் தேங்கி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
கம்பம் திருவள்ளுவர் காலனி பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியாகும். 200 குடியிருப்புகள் உள்ளது. ரேஞ்சர் ஆபிஸ் ரோட்டில் இருந்து இந்த காலனிக்கு நுழையும் இடத்தில் தெற்கு பகுதியில் இருந்து வடக்கு நோக்கி பெரிய சாக்கடை கட்டப்பட்டுள்ளது.
இந்த சாக்கடையில் திருவள்ளுவர் காலனி மட்டுமின்றி ஆங்கூர் பாளையம் ஊராட்சி பகுதிகளில் இருந்தும் கழிவு நீர் வருகிறது.
சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் அப்படியே மாதக்கணக்கில் தேங்கி நிற்கிறது. பாலம் சேதமடைந்ததால் சாக்கடை கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதாக கூறுகின்றனர். அருகில் அங்கன்வாடி மையம் ஒன்றும் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய்களை பரப்பும் வகையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. சாக்கடையை சுத்தம் செய்ய நகராட்சி, ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.