/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் தட்டுப்பாடால் ரோடு மறியல்
/
குடிநீர் தட்டுப்பாடால் ரோடு மறியல்
ADDED : நவ 05, 2025 12:44 AM

தேவதானப்பட்டி: சாத்தாகோவில்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொது மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
தேவதானப்பட்டி பேரூராட்சி 17 வது வார்டு சாத்தாகோவில்பட்டியில் ஏராளமான பொது மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.
இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் பொது மக்கள் அவதிப்பட்டனர். உவர்பு நீரை குடிக்கும் அவல நிலை தொடர்ந்தது. இதனால் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, சாத்தாகோவில்பட்டி பொது மக்கள் தேவதானப்பட்டி - வத்தலக்குண்டு ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன், பேரூராட்சி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து இன்று முதல் (நவ.,5) குடிநீர் வினியோகம் செய்யப்படும் என தெரிவித்ததால் ரோடு மறியல் கைவிடப்பட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.

