ADDED : மே 18, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அன்னஞ்சி விலக்கு அருகே காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை சுற்றி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சிலர் இடையூறாக கடைகள் வைத்திருந்தனர். அதனை அகற்ற கோரி கோயில் நிர்வாகத்தினர் கூறி வந்தனர். சிலர் கடைகளை அகற்றினர். சிலர் கடைகளை அகற்ற மறுத்து வந்தனர். இடையூறான கடைகளை அகற்ற கோரி கோயிலில் வழிபாடு நடத்தும் இரு சமூகத்தினர் தேனி -பெரியகுளம் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இடையூறாக இருந்த கடை அகற்றப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.