ADDED : மார் 03, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுாரில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 21 வார்டுகளில் 13 இடங்களில் தார் சாலைகள் அமைக்கும் பணியை நகராட்சி கமிஷனர் காஞ்சனா முன்னிலையில், நகராட்சித் தலைவர் பத்மாவதி துவக்கி வைத்தார்.
பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்திருந்த பகுதிகளில் தார் சாலை அமைப்பதால் மகிழ்ச்சி அடைந்தனர். கவுன்சிலர் லோகந்துரை, பணி மேற்பார்வையாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

