ADDED : ஜன 20, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: வைகை அணை -க.விலக்கு ரோட்டில் வைகை அணையின் வலது கரை ஆர்ச் அருகே ரோடு விரிவாக்கப் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வருகிறது.
வளைவான இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. ரோட்டில் சென்டர் மீடியன் அமைத்து ரோட்டில் இருபுறமும் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ரோட்டில் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும், இப்பகுதியில் விபத்தின்றி வாகனங்கள் சென்று வரவும், சாலை பாதுகாப்பு, சாலை சந்திப்பு மேம்பாட்டு பணிகள் திட்டத்தில் தேவையான இடங்களில் சென்டர் மீடியனும் விரிவாக்கமும் செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் திருக்குமரன் தெரிவித்தார்.