/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பால் ரூ.4 கோடியில் ரோடு பராமரிப்பு பணிநிறுத்தம் பழைய ரோட்டை தோண்டி அமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜூலை 12, 2025 04:04 AM
கம்பம், : கம்பம் நகராட்சியில் பழைய ரோட்டை தோண்டி புதிய ரோடு அமைக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தி ரூ.4.9 கோடி மதிப்பீட்டில் துவங்கிய ரோடு அமைக்கும் பணியை எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தி வைத்துள்ளனர்.
கம்பம் நகராட்சியில் தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு திட்டத்தில் 7.64 கி.மீ. தூரத்திற்கு பல்வேறு தெருக்களில் ரூ.3 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் தார் ரோடு அமைக்கவும், சிறப்பு நிதியின் கீழ் 1.5 கி.மீ. தூரத்திற்கு ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் வீதிகளில் பேவர் பிளாக் பதிக்கும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்த ஒப்பந்தகாரர்கள் பணிகளை துவக்க முயன்ற போது, தி.மு.க.,அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இணைந்து ரோடு பணிகளை செய்ய அனுமதிக்கவில்லை.
கவுன்சிலர்கள் தரப்பில் கூறுகையில் , 'ரோடு அமைக்கும் பணியில் மேலோட்டமாக தரமற்ற வகையில் நடத்த தயாராகி வருகின்றனர். வீதிகளில் உள்ள பழைய ரோட்டை தோண்டி , புதிய ரோடு அமைக்க கூறுகிறோம். அவர்கள் ஏற்கனவே இருந்த ரோட்டை சுத்தம் செய்து தார் ஊற்றி ரோடு அமைக்க திட்டமிட்டு ரூ.4 கோடி நிதியை வீணடிக்க பார்க்கின்றனர்.
இதனால் வீடுகள் பள்ளமாகவும், ரோடு மேடாகி விடும்.
மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். ரோடு பணியால் அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த பார்க்கின்றனர்.
கவுன்சிலர்களை கலந்தாலோசிப்பதில்லை. எங்களை பற்றி தவறாக விமர்சனம் செய்கின்றனர். எனவே ரோடு அமைக்கும் பணி நிறுத்தி வைத்துள்ளோம்,'என்றனர்.கவுன்சிலர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ரோடு அமைக்கும் பணியை ஒப்பந்தகாரர்கள் நிறுத்தி விட்டனர்.
இதுபற்றி நகராட்சி விசாரிக்கையில், சாக்கடை கட்டி ரோடு அமைக்க விதிகளில் இடமில்லை. நகரில் உள்ள 57 வீதிகளில் 4 வீதிகளில் மட்டும் ஒரு இன்ச் தோண்டி ரோடு போட உள்ளோம். மற்ற வீதிகளிலும் ஒரு அடி ரோட்டை தோண்டி புதிய ரோடு அமைக்க கவுன்சிலர்கள் கூறுகின்றனர்.
அதற்கு சட்டத்தில் இடமில்லை. ரோடு போடும் பணிகள் வேண்டாம் என்றால் எழுதிக் கொடுங்கள் என்று கேட்கிறோம். கவுன்சிலர்கள் எழுதியும் தர மறுக்கின்றனர் என்றனர்.