/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : பிப் 15, 2024 06:22 AM

பெரியகுளம்: பெரியகுளம் நெடுஞ்சாலைத்துறை, டி.கள்ளிப்பட்டி செவன்த்டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பெரியகுளம் அரசு போக்குவரத்து டெப்போ அருகே துவங்கியது. மதுரை கோட்டப் பொறியாளர் வரலட்சுமி, உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரின் சுல்தானா, உதவிப் பொறியாளர்
காவ்யா மீனா, பள்ளி முதல்வர் எட்வின் நேசஸ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். டி.எஸ்.பி., சக்திவேல், சாலை ஆய்வாளர் சரவணன், பள்ளி துணை முதல்வர் வீரன், இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் முன்னிலை வகித்தனர்.
' சாலை பாதுகாப்பு நம் உயிர் பாதுகாப்பு, நமது பள்ளி சாலை விபத்தில்லா பள்ளி , சாலை விதிகளை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி மாணவ, மாணவியர் ஊர்வலமாக பாரதி நகர் வரை வந்தனர். பள்ளியில் விழிப்புணர்வு படக்காட்சிகள் நடந்தது. அதில் பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

