/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 10, 2025 05:29 AM
கம்பம்: கம்பத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.  சாலை விதிகள் வாசங்கள் அடங்கிய  பதாதைகளை மாணவர்கள் பிடித்து கோஷம் எழுப்பியும் சென்றனர். உத்தமபாளையம் உதவி செயற்பொறியாளர் ராஜா, நாலந்தா இன்னோவேசன் பள்ளி தாளாளர் விஸ்வநாதன், டிராபிக் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், டிராபிக் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தில்  நாலந்தா இன்னோவேசன் பள்ளி, சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , சிபியூ மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

