/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 23, 2025 04:57 AM

கடமலைக்குண்டு: கண்டமனூரில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஊர்வலம் நடந்தது.
தேனி நெடுஞ்சாலை கோட்டம், மதுரை சாலை பாதுகாப்பு அலகு சார்பில் அதிகாரிகள், அலுவலர்கள் கண்டமனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். பள்ளி தலைமை ஆசிரியை எழிலரசி வரவேற்றார். கோட்ட பொறியாளர் வரலட்சுமி, ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், தேனி மோட்டார் வாகன ஆய்வாளர் அழகேசன், உதவி கோட்ட பொறியாளர்கள் திருக்குமரன், சாந்தினி, உதவி பொறியாளர்கள் முருகேஸ்வரன், காவியமீனா, ஐஸ்வர்யா ஆகியோர் பங்கேற்றனர். ரோடுகளில் விபத்தின்றி செய்யவேண்டிய வழிமுறைகள், சாலை விதிமுறைகளை பின்பற்றுதல் குறித்து மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து குறும்படம் ஒளிபரப்பி, வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

