/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : ஜன 25, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டி மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் ஐசக் பூச்சாங்குளம் தலைமையில் நடந்தது.
துணை முதல்வர் ஜோஷி பரம்தொட்டு,நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சுவாமிநாதன், மதுரை கோட்ட சாலை பாதுகாப்பின் அலகின் கோட்டம் பொறியாளர் வரலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர்கள் பேசினர். கோட்ட பொறியாளர்கள் சாந்தினி, கிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் காவ்யா மீனா, ஐஸ்வர்யா, டி.எஸ்.பி., நல்லு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரமேஷ் பங்கேற்றனர்.

