ADDED : ஆக 08, 2025 03:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி - பெரியகுளம் ரோட்டில் ரயில்வே கேட் அருகே முத்துதேவன்பட்டி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளி என்.சி.சி., செஞ்சிலுவை சங்க, சாரண இயக்க மாணவர்கள் சாலை பாதுகாப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சாலை விதிகளை பின்பற்ற வேண்டியதின் அவசியம், சிக்னல்களை மதித்தல், ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியும், ஒலி பெருக்கி மூலம் பேசியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள் பள்ளி தலைவர் முத்துராமலிங்கம், இயக்குநர் சசிகுமார், பள்ளி முதல்வர் செல்வி, துணை முதல்வர் சவிதா வாழ்த்திபாராட்டினர்.

