/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மலைப் பாதையில் இரண்டாக பிளந்த ரோடால் விபத்து அபாயம்: சபரிமலை உற்ஸவத்திற்கு முன் சீரமைக்க வலியுறுத்தல்

ADDED : அக் 19, 2025 09:44 PM

கூடலுார்: குமுளி மலைப் பாதையில் கனமழையால் ரோட்டின் ஓரத்தில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லோயர்கேம்பில் இருந்து எல்லைப் பகுதி வரையுள்ள குமுளி மலைப் பாதை 6 கி.மீ., துாரம் கொண்டதாகும். பல ஆபத்தான வளைவுகள் உள்ளன. இரு மாநில எல்லையாக இருப்பதால் வாகனப் போக்குவரத்து அதிகம். கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் 3 வது கி.மீட்டரில் உள்ள கொண்டை ஊசி வளைவு அருகே ரோட்டின் ஒரு பகுதி இரண்டு பகுதியாக பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து மழை நீடிக்கும் போது மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையில் அப்பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்ல எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 நாட்கள் மழை இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் இரவு நேரங்களில் மலைப் பாதையில் டூவீலர்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், வாகனங்கள் ஆபத்தான வளைவுகளில் மெதுவாக செல்லவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். சபரிமலை உற்ஸவம் காலம் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அப்பகுதியில் விரைவில் சீரமைப்புப் பணிகளை துவங்கி முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.