/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசல்
/
தேனியில் தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசல்
தேனியில் தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசல்
தேனியில் தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசல்
ADDED : அக் 19, 2025 09:43 PM

தேனி: தேனி நகர் பகுதியில் பொது மக்கள் பொருட்கள் வாங்க குவிந்தனர். இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று தீபாவளி விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள், பட்டாசுகள் உள்ளிட்டவை வாங்குவதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் தேனிக்கு வந்திருந்தனர். பொருட்கள் வாங்குவதற்காக தேனி நகர் பகுதியில் பகவதியம்மன் கோயில்தெரு, எடமால் தெரு, கிழக்கு சந்தை பகுதி, கடற்கரை நாடார் தெரு, சுப்பன்செட்டி தெருக்களில் உள்ள கடைகளில் குவிந்தனர். பொது மக்கள் வந்திருந்த வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாததால் பழைய பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தினர். ஆட்டோக்கள் உள்ளிட்டவையும் இடையூறாக நிறுத்தப்பட்டன. இதனால் மதுரை ரோடு, கம்பம் ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலரும் நெரிசலில் சிக்கி, காத்திருந்து வீடு திரும்பினர்.
போடி நேற்று முன்தினம் விடிய, விடிய பெய்த கன மழையால் ரோட்டின் ஓரங்களில் கடைகள் அமைத்திருந்த வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் சிரமம் ஏற்பட்டது. தீபாவளி பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர். இன்று தீபாவளி பண்டிகை நாள் என்பதால் நேற்று காலை முதல் மழை இன்றி 'வெறிச்' என வெயில் ஆக இருந்ததால் தீபாவளி பொருட்கள் விற்பனை அமோகமாக இருந்தது. இதனால் வியாபாரிகளும், புத்தாடை, மளிகை பொருட்கள், இனிப்பு உள்ளிட்டவைகளை வாங்கி கேரளா, போடி, சுற்று கிராம பகுதியை சேர்ந்த பொது மக்களும் குடும்பத்துடன் வருகை தந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். காமராஜ் பஜாரில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. போடியில் தனி பார்க்கிங் வசதி இல்லாததால் பஸ் ஸ்டாண்ட், பி.ஹைச்., ரோடு, தேவாரம் ரோட்டில் இடையூறாக வாகனங்களை நிறுத்தி சென்றனர்.