/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் ரோட்டோர கடைகளால் விபத்து அபாயம்
/
ஆண்டிபட்டியில் ரோட்டோர கடைகளால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 16, 2025 07:06 AM
ஆண்டிபட்டி; ஆண்டிப்பட்டியில் ரோட்டை ஆக்கிரமித்து செயல்படும் கடைகளால் அடிக்கடி விபத்து அபாயம் ஏற்படுகிறது.
கொச்சி -- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி நகர் பகுதி உள்ளது. ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பு வரை நடைபாதை, ரோடு ஆகியவற்றை ஆக்கிரமித்து வாகனங்களில் பொருட்களை கொண்டு வந்து வியாபாரம் செய்கின்றனர். தெப்பம்பட்டி ரோட்டில் இருந்து வைகை ரோடு சந்திப்பு வரை ரோட்டின் மையத்தில் தடுப்புகள் அமைத்து சமீபத்தில் ஒரு வழி பாதை ஆக்கப்பட்டுள்ளது.
ஒரு வழி பாதையில் ஆட்டோக்களையும் வரிசையாக நிறுத்தி விடுகின்றனர். ரோட்டில் ஓரங்களில் உள்ள நிரந்தர கடைகளையும் ரோடு வரை நீட்டிப்பு செய்கின்றனர்.
இதனால் நடந்து செல்பவர்கள் ரோட்டில் சென்று விபத்தை சந்திக்கின்றனர். இருசக்கர வாகனங்கள் ஆட்டோக்களை கட்டுப்பாடு இன்றி ரோட்டில் நிறுத்தி பலருக்கும் இடையூறு செய்கின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம், போலீசார் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள கடைகள், விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களை கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் ஆண்டிபட்டியில் தனிக்கவனம் செலுத்தி தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தவும் வாகனங்களை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

