/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொச்சி - தனுஷ்கோடி சாலையில் ரோட்டோரக் கடைகள் அகற்றம்
/
கொச்சி - தனுஷ்கோடி சாலையில் ரோட்டோரக் கடைகள் அகற்றம்
கொச்சி - தனுஷ்கோடி சாலையில் ரோட்டோரக் கடைகள் அகற்றம்
கொச்சி - தனுஷ்கோடி சாலையில் ரோட்டோரக் கடைகள் அகற்றம்
ADDED : நவ 01, 2025 03:17 AM

மூணாறு: ரோட்டோரக் கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்கியும் அகற்றாததால், வருவாய்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் தலையிட்டு அகற்றினர்.
இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஆபத்தான பகுதிகளில் உள்ள ரோட்டோரக் கடைகளை பேரிடர் மேலாண்மை சட்டப்படி அகற்றுமாறு கலெக்டர் தினேசன்செருவாட் உத்தரவிட்டார்.
அதன்படி கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறில் அரசு தாவரவியல் பூங்கா எதிரே உள்ள கடைகளை மூணாறு சிறப்பு தாசில்தார் காயத்ரிதேவி தலைமையில் வருவாய் துறையினர், நிலம் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் நேற்று முன்தினம் காலை அகற்றும் பணியை துவக்கினர்.
அப்போது அங்கு திரண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடைகளை தாமாக அகற்றி கொள்ள ஒரு நாள் கால அவகாசம் கேட்டனர். அதனை ஏற்று தேவிகுளம் சப் கலெக்டர் ஆர்யா நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் கால அவகாசம் வழங்கினார்.
இந்நிலையில் நேற்று காலை ஒரு சிலர் வழக்கம் போல் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடு பட்டனர்.
மூணாறு சிறப்பு தாசில்தார் காயத்ரிதேவி தலைமையில் வருவாய் துறையினர் தலையிட்டு போலீசாரின் உதவியுடன் கடைகளை அகற்ற செய்தனர்.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அரசு தாவரவியல் பூங்கா முதல் சிக்னல் பாய்ண்ட் வரை கடைகள் அகற்றப்பட்டன.

