/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி அரு கே ரோட்டோர கிணற்றில் தடுப்புச் சுவர் இன்றி விபத்து அபாயம்
/
போடி அரு கே ரோட்டோர கிணற்றில் தடுப்புச் சுவர் இன்றி விபத்து அபாயம்
போடி அரு கே ரோட்டோர கிணற்றில் தடுப்புச் சுவர் இன்றி விபத்து அபாயம்
போடி அரு கே ரோட்டோர கிணற்றில் தடுப்புச் சுவர் இன்றி விபத்து அபாயம்
ADDED : மே 15, 2025 05:09 AM

தேவாரம்: போடி அருகே திம்மிநாயக்கன்பட்டி - எரணம்பட்டி செல்லும் ரோட்டோர கிணற்றின் அருகே தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
போடி அருகே திம்மிநாயக்கன்பட்டியில் இருந்து தேவாரத்திற்கு எரணம்பட்டி, கோணாம்பட்டி, குட்டசெட்டிபட்டி, தம்மிநாயக்கன்பட்டி, மறவபட்டி வழியாக தேவாரம் செல்லலாம். எரணம்பட்டி செல்லும் ரோட்டின் அருகே கிணறுகள் அமைந்து உள்ளன.
ரோட்டோர பகுதியில் தடுப்புச்சுவர் இன்றி திறந்த வெளியாக கிணறு அமைந்து உள்ளன. இந்த ரோட்டில் விளக்குகள் இல்லாததால் இரவில் டூவீலர், கார்களில் செல்வோர் கிணறு இருக்கும் இடம் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தடுப்புச்சுவர் அமைத்திட அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன் ரோட்டோர கிணற்றின் அருகே தடுப்புச் சுவர் அமைத்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.