ADDED : செப் 11, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி ராமர் கோயில் தெரு தீனா 23. இவர் நேற்று கீரைக்கடை வீதியில் தனியாக நடந்து சென்றார். அப்போது போடி ஆர்.ஐ., ஆபீஸ் ரோட்டில் வசிக்கும் ஹிதேந்திரா 21, தீனாவை கீழே தள்ளி விட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி சட்டையில் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்துள்ளார்.
தடுக்க வந்த தீனாவின் நண்பர் செந்தில்குமாரை கொலை மிரட்டல் விடுத்தார். தீனா புகாரில் போடி டவுன் போலீசார் ஹிதேந்திராவை கைது செய்தனர்.