ADDED : ஜூலை 03, 2025 12:23 AM

மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோட்டில் பாறை உருண்டு விழுந்தது.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு இடையே ரோடு இருவழி சாலையாக அகலப்படுத்தப்பட்டது. அப்போது மூணாறில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள கேப் ரோட்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மலைகளை குடைந்து பாறைகள் உடைக்கப்பட்டன. அதனால் அப்பகுதியில் பாறைகள் உருண்டு வருவதும், நிலச்சரிவு ஏற்படுவதும் அடிக்கடி நிகழ்கிறது. குறிப்பாக அவை மழை காலங்களில் கூடுதலாக ஏற்படும் என்பதால், அந்த வழியில் மழைக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகம் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது மழை குறைவு என்றபோதும் நேற்று முன்தினம் இரவு கேப் ரோட்டில் பாறை உருண்டு விழுந்தது.
அப்போது வாகனங்கள் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. பாறை ரோட்டில் விழுந்தபோதும் போக்குவரத்து தடை ஏற்படவில்லை. நேற்று காலை 11:00 மணிக்கு பாறை அகற்றப்பட்டது.