/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பீர்மேடு அருகே ரோட்டில் உருண்டு சிதறிய பாறைகள்
/
பீர்மேடு அருகே ரோட்டில் உருண்டு சிதறிய பாறைகள்
ADDED : ஜன 06, 2024 06:37 AM

மூணாறு: கொட்டாரக்கரா திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பீர்மேடு அருகே பாறைகள் உருண்டு விழுந்து சிதறியது. அப்போது வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கொட்டாரக்கரா திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும். தவிர தற்போது சபரிமலை சீசன் என்பதால் வழக்கத்தை விட அதிகமாக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் பீர்மேடு அருகே மத்தாயி சரிவு பகுதியில் மலை மீது இருந்து பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்து உடைந்து சிதறியது.
சம்பவம் நடப்பதற்கு ஒரு சில நிமிடம் வரை வாகனங்கள் சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. ஆனால் பாறைகள் உருண்டு விழுந்தபோது வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தது. அதனால் மண் அரிப்பு ஏற்பட்டு பாறைகள் உருண்டதாக தெரிய வந்தது.
பீர்மேடு போலீசார், தீயணைப்பு துறையினர் ஆகியோர் ரோட்டில் சிதறி கிடந்த கற்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.