/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டரி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
/
ரோட்டரி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ADDED : ஜூலை 25, 2025 03:12 AM

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து போடி தர்மத்துபட்டியில் உள்ள பாலமுருகன் சிறப்பு பள்ளியில் 'செல்லமே செல்லம்' என்ற சிறப்பு திட்டத்தில் விளையாட்டு போட்டிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட கவர்னர் கார்த்தி தலைமை வகித்தார். போட்டிகளில் 250 மாணவர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு பள்ளிக்கும் விளையாட்டு, சமையல் பொருட்கள் வழங்கப்பட்டன.
விழாவில் தேனி சங்க செயலாளர் செளந்திரபாண்டியன், சங்க நிர்வாகி மகேஷ்ராஜா, பர்வீன்சிங், கம்பம் கிரீன்வேலி ரோட்டரி சங்க தலைவர் நாராயணகுமார், செயலாளர் டாக்டர் சூரிய குமார், கம்பம் ரோட்டரி உறுப்பினர் சதிஷ்பாபு, உசிலம்பட்டி ராஜேந்திரன், ஆண்டிபட்டி ரோட்டரி சங்க துணை ஆளுநர் செந்தில்குமார், கூடலுார் ரோட்டரி சங்க துணை ஆளுநர் சுரேஷ்கண்ணா, மாவட்ட செயலாளர் போடி செல்லக்குமார், துணை ஆளுநர்கள் சங்கிலிகாளை, சின்னமனுார் நாகராஜ், கரூர் சிறப்பு திட்ட இயக்குனர் சந்தோஷ், தேனி ரோட்டரி சங்கம், தேனி சங்கமம் ரோட்டரி, தேனி வைகை ஸ்டார், தேனி ஸ்டார்ஸ், தேனி சென்ட்ரல் ஜேம்ஸ் ரோட்டரி, சின்னமனுார் ரோட்டரி, சின்னமனுார் கிரீன் சிட்டி, சின்னமனுார் சென்ட்ரல் ரோடு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை குமார் செய்திருந்தார். சிறப்பு பள்ளி ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.