/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறில் ரோட்டோர கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
/
மூணாறில் ரோட்டோர கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
மூணாறில் ரோட்டோர கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
மூணாறில் ரோட்டோர கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
ADDED : அக் 27, 2024 04:08 AM
மூணாறு : மூணாறில் ரோட்டோர கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்தது.
மூணாறில் செப்.9ல் நடந்த போக்குவரத்து ஆலோசனை குழு கூட்டத்தில் ரோட்டோர கடைகளை அகற்ற அனைத்து அரசியல் கட்சியினரின் ஒப்புதலுடன் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஊராட்சி சார்பில் நேற்று முன்தினம் முதல் ரோட்டோர கடைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கடைகளை அகற்றும் பணி துவங்கியது. நகரில் தனியார் தேயிலை கம்பெனி தலைமை அலுவலகம் அருகில் உள்ள 14 கடைகளுக்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றதால் அவற்றை அகற்ற இயலவில்லை.
ஆலோசனை: இதனிடையே கடைகள் அகற்றும் பணியை தற்காலிகமாக கைவிடுமாறு காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., ஆகிய கட்சியினர் தலையிட்டு ஊராட்சி செயலர் உதயகுமாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அத்தகவலை ஊராட்சி செயலர், தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணனிடம் தெரிவித்தார். அவர், கடைகளை அகற்றும் பணியை தொடருமாறு உத்தரவிட்டதால், அரசியல் கட்சியினரின் பேச்சு வார்த்தை பலனளிக்கவில்லை. அதன் பிறகு போலீசாரின் பாதுகாப்புடன் கடைகள் அகற்றும் பணி முழு வீச்சில் நடந்தது.