/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.1.15 கோடி மோசடி: அதிகாரி மீது வழக்கு
/
ரூ.1.15 கோடி மோசடி: அதிகாரி மீது வழக்கு
ADDED : நவ 20, 2024 02:41 AM
தேனி:தேனியில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலக கண்காணிப்பாளர் முருகானந்தம் ரூ.1.15 மோசடி செய்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கழிவுநீர் அகற்றும் அலுவலகம் தேனி என்.ஆர்.டி., நகரில் செயல்படுகிறது. இந்த அலுவலகநிர்வாகப் பொறியாளர் கருத்தபாண்டியன், கண்காணிப்பாளராக முருகானந்தம் பணிபுரிந்தனர்.இந்த அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரிய கழிவுநீர் அகற்றும் கோட்ட தலைமை அலுவலக விழிப்புப் பணி அலுவலர் வரதராஜன் தலைமையிலான உயரதிகாரிகள் குழு ஜூன் 6, ஆக. 5,செப்.24, 26ல் ஆய்வு நடத்தினர்.
அதில் 2022 அக்.1ல் முருகானந்தம் காசோலை மூலம் சென்னையை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.42.29 லட்சம் அனுப்பியுள்ளதை கண்டறிந்தனர்.மேலும் அலுவலக வங்கிக் கணக்கில் இருந்து, தனது பெயரில் உள்ள வங்கிக் கணக்கிற்கு பல்வேறு தேதிகளில் ரூ.75.77 லட்சத்தை மாற்றியுள்ளார்.
இதனால் மொத்தம் ரூ.1.15 கோடி மோசடி செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
நிர்வாகப் பொறியாளர் கருத்தப்பாண்டியன் புகாரில் கண்காணிப்பாளர் முருகானந்தம் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.