/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெள்ளத்தில் சென்ற ஆடுகள் கோழிக்கு ரூ.19 லட்சம் நிவாரணம்
/
வெள்ளத்தில் சென்ற ஆடுகள் கோழிக்கு ரூ.19 லட்சம் நிவாரணம்
வெள்ளத்தில் சென்ற ஆடுகள் கோழிக்கு ரூ.19 லட்சம் நிவாரணம்
வெள்ளத்தில் சென்ற ஆடுகள் கோழிக்கு ரூ.19 லட்சம் நிவாரணம்
ADDED : அக் 30, 2025 04:28 AM
கம்பம்: மாவட்டத்தில் பெய்த மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆடுகள்,கோழிகளுக்கு ரூ.19 லட்சம் நிவாரணம் பாதிக்கப்பட்டோரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
கடந்த அக். 17 ல் பெய்த கனமழை கம்பம் பள்ளத்தாக்கை புரட்டி போட்டது. முல்லைப் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடியது. பல வீடுகள் இடிந்தன.
ஆடுகள், கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டது. பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து அறிக்கை வழங்க அரசு உத்தரவிட்டது.
உத்தமபாளையம் வட்டாரத்தில் ஆர்.டி.ஓ. செய்யது முகமது தலைமையில் வருவாய், வேளாண், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகளை வேகப்படுத்தினர். இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை அவர்களின் வங்கி கணக்கில் பாதிப்படைந்த சில நாட்களிலேயே வரவானது. சுருளிப்பட்டியில் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட 60 ஆடுகளுக்கு தலா ரூ. 4 ஆயிரம் வீதம் ரூ. 2.40 லட்சம், தேவாரம், கூடலூர் பகுதிகளில் அடித்து செல்லப்பட்ட 16,574 கோழிகள்,குஞ்சுகளுக்கு தலா ரூ. 100 வீதம் ரூ. 16.57 லட்சம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. செய்யது முகமது கூறுகையில், முழுகையாக மற்றும் பகுதி சேதமடைந்த 43 வீடுகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ. 1.92 லட்சம், வெள்ளத்தில் சேதமடைந்த 88 வீடுகளுக்கு தலா ரூ. 2500 வீதம் ரூ. 2.20 லட்சம் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
உத்தமபாளையம் தாலுகாவில் மொத்தம் ரூ.23 லட்சத்து 9 ஆயிரத்து 400 நிவாரணமாக வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சில நாட்களிலேயே அலுவலர்கள் துரிதமாக பணியாற்றி, நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்தனர் என்றார்.

