ADDED : அக் 30, 2025 04:28 AM
கம்பம்: கம்பம் வட்டாரத்தில் நெல், பாசிப்பயறு மகசூல் மதிப்பீடு பணிகள் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் பயிர் மகசூல் மதிப்பீடுகள் செய்து உற்பத்தி எவ்வளவு என்பதை புள்ளியியல் துறை நிர்ணயம் செய்யும். இந்தாண்டு நெல், பாசிப்பயறு மகசூல் மதிப்பீடு பணிகள் புள்ளியியல் துறை உதவி இயக்குநர் ரமேஷ் கண்ணன், ஆய்வாளர் சரவணக்குமார், கம்பம் வேளாண் துணை அலுவலர் குணசேகர் கொண்ட குழுவினர் கம்பம் மற்றும் கூடலூரில் 4 திடல்களில் மகசூல் மதிப்பீடு செய்ய நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 10 மீட்டர் நீளம் 5 மீட்டர் அகலத்தில் இந்த திடல் இருக்கும். இந்த திடலில் கிடைக்கும் மகசூலை வைத்து உற்பத்தியை மதிப்பீடு செய்வார்கள்.
சுருளிப்பட்டி ரோட்டில் நெல் மகசூல் மதிப்பீடு செய்யப்பட்டது. 5 மீட்டர் நீளம் 5 மீட்டர் அகல பரப்பில் நெல் அறுவடை செய்ததில் சராசரியாக 7 டன் ஏக்கருக்கு கிடைத்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது . தட்டைப் பயறு , எள்ளு உள்ளிட்ட பயிர்கள் ஏற்கெனவே மதிப்பீடு செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

