/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி ராஜவாய்க்கால் சீரமைக்க ரூ.2.26 கோடி நிதி ஒதுக்கீடு: கால்வாயில் அஸ்திவாரங்களை அகற்ற முடிவு
/
தேனி ராஜவாய்க்கால் சீரமைக்க ரூ.2.26 கோடி நிதி ஒதுக்கீடு: கால்வாயில் அஸ்திவாரங்களை அகற்ற முடிவு
தேனி ராஜவாய்க்கால் சீரமைக்க ரூ.2.26 கோடி நிதி ஒதுக்கீடு: கால்வாயில் அஸ்திவாரங்களை அகற்ற முடிவு
தேனி ராஜவாய்க்கால் சீரமைக்க ரூ.2.26 கோடி நிதி ஒதுக்கீடு: கால்வாயில் அஸ்திவாரங்களை அகற்ற முடிவு
ADDED : டிச 19, 2024 05:48 AM

தேனி: தேனி ராஜவாயக்காலில் உள்ள நகராட்சி கட்டடங்களின் அஸ்திவாரத்தை அகற்ற நகராட்சி நிர்வாகம் ரூ.2.26 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 5 இடங்களில் பாலங்கள் சீரமைப்பு பணி நடைபெற உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி நகராட்சி பள்ளிவாசல் தெருவில் கொட்டக்குடி ஆற்றில் உள்ள ஷட்டர் பகுதியில் ராஜவாய்க்கால் துவங்குகிறது. இந்த வாயக்கால் நகர்பகுதி வழியாக 2.47 கி.மீ., பயணித்து மதுரை ரோட்டில் உள்ள தாமரைகுளத்தில் சேர்கிறது. இந்த வாய்க்கால் வழித்தடத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவில் கடந்தாண்டு அகற்றப்பட்டன. ஆனால், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்குள் சென்ற வாய்க்காலில் தரை மட்ட அளவில் இருந்த கட்டடங்களின் அஸ்திவாரம் அகற்றாமல் பணி முடங்கியது.
இதனால் ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றியும் கால்வாயில் ஆற்று நீர் செல்லாமல் கழிவுநீர் மட்டும் சென்றது.
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வரும் மழைநீர், மீறுசமூத்திர கண்மாய் மறுகால் தண்ணீர் ராஜவாய்க்கால் வழித்தடத்தில் எதிராக பயணித்து மின் மயானம் அருகே கொட்டக்குடி ஆற்றில் கலந்தன. ஷட்டர் பகுதியில் இருந்து ராஜவாய்க்கால் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு இன்றி பணி
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ராஜவாய்கால் சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. பல இடங்களில் கரைகள் சீரமைக்கப்பட்டன. மேலும், ராஜவாய்க்காலில் இருந்த மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி மின்வாரியத்தால் நடந்தது.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ராஜவாய்க்கால் குறுக்கே உள்ள 90 மீட்டர் நீளத்திற்கு நகராட்சி கட்டடம் உள்ளது.
இதனை அகற்றவும், ராஜவாய்க்காலில் 5 இடங்களில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறு பாலங்கள் சீரமைப்பிற்கும் அரசு ரூ. 2.26 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. அதே சமயம் கம்பம் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் அமைக்கும் பணியும் நடக்க உள்ளது. போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் பணிகள் துவங்குவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது என்றனர்.