/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தலில் பணிபுரிந்தவர்களுக்கு மதிப்பூதியம் ரூ.2.56 கோடி ஒதுக்கீடு
/
தேர்தலில் பணிபுரிந்தவர்களுக்கு மதிப்பூதியம் ரூ.2.56 கோடி ஒதுக்கீடு
தேர்தலில் பணிபுரிந்தவர்களுக்கு மதிப்பூதியம் ரூ.2.56 கோடி ஒதுக்கீடு
தேர்தலில் பணிபுரிந்தவர்களுக்கு மதிப்பூதியம் ரூ.2.56 கோடி ஒதுக்கீடு
ADDED : நவ 15, 2024 05:20 AM
தேனி: மாவட்டத்தில் தேர்தல் பணிபுரிந்த அதிகாரிகள், அலுவலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் ரூ.2.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
லோக்சபா தேர்தல் மார்ச் 16ல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்.19ல் ஓட்டுப்பதிவு நடந்தது. தேனி லோக்சபா தொகுதியில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம், சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தவிர்த்தல், தேவையின்றி அதிக அளவிலான பணம், பொருட்களை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்வதை தடுக்க பல்வேறு நிலை, பறக்கும் படை குழுக்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டன.
தேர்தல் பணிக்காக வருவாய்த்துறை, வேளாண், தோட்டக்கலை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த 1281 அதிகாரிகள், அலுவலர்கள் பணிபுரிந்தனர். இவர்கள் தேர்தல் நேரத்தில் கூடுதலாக பணிபுரிந்ததற்காக தேர்தல் ஆணையம் ரூ.2.56 கோடியை மதிப்பூதியமாக ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை அந்ததந்த தாலுகா வாரியாக விரைவில் வழங்கப்பட உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.