/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ்சில் முதியவரிடம் ரூ. 45 ஆயிரம் திருட்டு
/
பஸ்சில் முதியவரிடம் ரூ. 45 ஆயிரம் திருட்டு
ADDED : மே 11, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி; போடி நாகலாபுரம் ராஜேந்திரன் 59. தனது குடும்ப செலவுக்காக தனது ஊரில் தெரிந்தவரிடம் ரூ.45 ஆயிரம் பணத்தை கடன் வாங்கிக் கொண்டு, வீரபாண்டி திருவிழாவில் பங்கேற்றார்.
அதன் பின், பணத்துடன் மதுரை விக்கிரமங்கலம் செல்வதற்காக பஸ்சில் சென்றார். பணத்தை தனது டவுசர் பாக்கெட்டில் வைத்திருந்தார்.
ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே வந்தபோது, ராஜேந்திரன் அருகில் அமர்ந்திருந்த அடையாளம் தெரிந்த, பெயர் விலாசம் தெரியாத நபர் பணத்தை திருடி சென்று விட்டார்.
பாதிக்கப்பட்ட ராஜேந்திரன், ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.