/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.5.15 லட்சம் மோசடி: ஒருவர் கைது
/
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.5.15 லட்சம் மோசடி: ஒருவர் கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.5.15 லட்சம் மோசடி: ஒருவர் கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.5.15 லட்சம் மோசடி: ஒருவர் கைது
ADDED : ஜன 30, 2024 12:38 AM

தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5.15 லட்சம் மோசடி செய்த தேனி மாவட்டம் கம்பம் மணிநகரை சேர்ந்த அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியர் செந்தில்குமாரை 37, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கம்பம் உத்தமபுரம் பட்டதாரி தமிழ்செல்வி 32. இவரிடம் கம்பம் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்த செந்தில்குமார் அறிமுகம் ஆனார்.இவர் தனக்கு சென்னையை சேர்ந்த பிரசாத்குமாரை தெரியும். பணம் கொடுத்தால் அவர் மூலம் அரசு வேலை கிடைக்கும் என்றார். இதனை நம்பிய தமிழ்செல்வி செந்தில்குமார், பிரசாத்குமார் ஆகியோர் வங்கிக் கணக்கில் ரூ.7.25 லட்சத்தை செலுத்தினார். வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்தனர். தமிழ்செல்வி பணத்தை திருப்பிக்கேட்க ரூ.2.10 லட்சத்தை மட்டும் பிரசாத்குமார் வழங்கியுள்ளார். மீதியுள்ள பணத்தை தராமல் ஏமாற்றினர். ஏற்கனவே போடி பத்தாகாளிபுரத்தை சேர்ந்த ஈஸ்வரனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக பணி மோசடி வழக்கில் சென்னை பிரசாத் குமார் கைதாகி உள்ளார். இந்நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று கம்பம் அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியராக பணியாற்றிய செந்தில்குமாரை கைது செய்தனர்.